குருக்கள்மடத்தில் முதல்முறையாக சிறுவர் நூலகம் திறந்துவைப்பு

குருக்கள்மடத்தில் வாசகர் வட்டத்தினால் முதன்முறையாக சிறுவர் நூலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு குருக்கள்மடம் வாசகர் வட்டத்தினால் அதன் தலைவர் ஞானவேல் தலைமையில் இன்று மாலை குருக்கள்மடம் பொதுநூலக மண்டபத்தில் சிறுவர் நூலக திறப்புவிழா இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை,கோவிந்தன் கருணாகரம்,மா.நடராசா ஆகியோரும் விசேட அதிதியாக காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், கௌரவ அதிதியாக மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் மற்றும் பல பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச சிறுவர்களின் கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகம் மாகாணசபை உறுப்பினர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.