மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடாத்தும் மண்டலப் பெருவிழாவும், மணிகண்ட யாத்ரோதயம் மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை 21ம் திகதி சனிக்கிழமை அதிகாலை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ஜெகநாதசர்மா, சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.சாம்பசிவம் சிவாச்சாரியார், ஐயப்ப குருசுவாமிமார்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கணபதி ஹோமம் இடம்பெற்று, கொழும்பு மற்றும் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொள்ளும் ஐயப்ப சுவாமிமார்களினால் பெரியளவிலான பஜனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் பூசை நிகழ்வுகளும் இடம்பெறும்
பூசையைத் தெடர்ந்து மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்; மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினால் முதன்முறையாக “மணிகண்ட யாத்ரோதயம்” என்னும் பஜனை சிறப்பு மலர் வெளியீடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
எனவே அனைத்து ஐயப்ப குருசுவாமிமார்களும்;, சுவாமிமார்களும், ஐயப்ப பக்த அடியார்களும் கலந்து கொண்டு மணிகண்டனின் அருள்கடாட்சம் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர் கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆதீனகர்த்தாவும், நிருவாக சபையினரும், மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
பூசைகள் மற்றும் மலர் வெளியீட்டு நிறைவுற்றதுடன் ஏற்பாட்டுக் குழுவினரால் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
