(பேரின்பராஜா சபேஷ்)
மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் அரசியல் தலையீடு இடம்பெறாமல் கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த முதலாம் தர அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராக தகுதியானவரெருவர் நியமிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தை 2014 ஆண்டு முற்பகுதியல் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வலயத்தின் கல்வி வளர்ச்சியை வினைத்திறனாக நடார்த்தக்கூடிய கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த முதலாம் தர அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் கல்வி வளர்ச்சியில் முதன்மையிலிருந்த மட்டக்களப்பு மாவட்டம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்ட வேளை கல்வி வளர்சியில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்வி வலயம் தூரநோக்கற்ற அரசியல்வாதிகளின் கைக்கூலிகளின் பிடியில் சிக்குண்டு சுயாதீனமற்றதும் சட்டவாக்கத்திற்கும் நல்லாட்சிக்கும் சவாலாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நியமிப்பு செய்யப்பட்டுள்ள கல்வித்தராதரமற்ற அழகியல் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சேவைப் பிரமாணங்களுக்கும் நியமிப்புக்கும் முரணாக நியமிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் தராதரங்களுக்கு முரணாக நியமிப்பு செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆகியோரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக வலயத்தின் கல்வி வளர்ச்சி பின்நோக்கித்தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் நோக்கம் கொண்ட இரண்டாம் தர அதிகாரியொருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் கல்குடா, பட்டிருப்பு மற்றும் மேற்கு வலயங்களுக்குப் பொறுப்பான வலயக் கல்விப் பணிப்பாளர்கள் சேவைப் பிரமானங்களின் படி முதலாந்தர அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு கல்வி வலயம் பரீட்சை மத்திய வலயமாக இருப்பதினாலும் தேசிய பாடசாலைகள் மற்றும் 1யுடீ பாடசாலைகளையும் அதிகளவு கொண்டிருப்பதன் காரணமாக சேவைப் பிரமானங்கள,; ஆட்சேர்ப்புத் திட்டங்கள், சேவைமூப்பு, சட்டவாட்சி என்பவற்றை மேலான கருத்திற்கொண்டு நியமிப்பு அதிகாரி முதலாம் தரத்தைச் சேர்ந்த கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்தவரை நியமிப்பு செய்வதற்கு நடவடிக்கையெடுத்தல் வேண்டும்.
இலங்கை கல்வி நிருவாக சேவையில் ஆட்சேர்ப்பு பதவியுயர்வு மற்றும் வினைத்திறன்மிக்க பயிற்சி என்பவற்றில் கடுமையான பிரமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஊயு(றுஃயு) 902013இ ளுஊகுசு 116ஃ2013 என்ற இரு வழக்குகளை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்தின் 7ஆம் உறுப்புரை வேரெந்த காரணங்களுக்கும் அல்லாமல் சேவைமூப்பு, தேர்ச்சி ஆகியவற்றை மாத்திரம் கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் தொழிலில் பொருத்தமான உயர் மட்டத்திற்கு பதவி உயர்வு பெற சமவாய்ப்பு உரிமையை உறுதிப்படுத்தியுள்ள வேளை சம்த்துவ கோட்பாட்டை மீறுகின்ற சமத்துவம்மின்மையானது உண்மையிலேயே நியாயமற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாககும்.
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரையில் 9.225, 9.226 இல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதும் 2011.12.17 அன்று சட்ட உயர் பீடமான பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதுமான பரிந்துரைகளை கிழக்கு மாகாண ஆளுநர் மாகாணத்தின் சட்டவாட்சியை மேலான கருத்திற்கொண்டு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வினைத்திறன்மிக்க முதலாம் தர அதிகாரி நியமிக்கப்படுவதோடு வலயத்தில் அரசியல் தலையீடுகள் களையப்பட்டு சுயாதீன சட்டவட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
