அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மாணவன் பௌதீக விஞ்ஞான துறையில் மாவட்டத்தில் முதலிடம்


(வி.சுகிர்தகுமார்)  

வெளியிடப்பட்டுள்ள  க.பொ.த.உயர்தரப்பரீட்சைகளின் பெறுபேறுகளின் நிமித்தம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் மாணவன் இராசநாயகம் ஹவிசாந் பௌதீக விஞ்ஞானத்துறையில் 3ஏ சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றார்.


இவர் அக்கரைப்பற்று நாவற்காடு பிரிவில் வசிக்கும் இராசநாயகம் சுகந்தினி ஆகியோரின் புதல்வன். இவரது பரீட்சை முடிவுகளை அறிந்த பலரும் நேரில் சென்று பாராட்டி வருவதுடன் அதிபர் எம்.கிருபைராஜா மகிழ்ச்சி வெளியிட்டார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்ற வருடமும் இதே பாடசாலையை சேர்ந்த மாணவி த.தர்ஷிக்கா உயிரியல் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.