ஆரம்ப நிலையில் நாட்டுப்பற்றினையும் இனங்களிடையே புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் ஒரு பகுதியினர் விடைபெற்றுச்செல்லும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 30வருட கால யுத்த சூழ்நிலையினால் மனங்களிடையே ஏற்பட்டுள்ள ஏனைய இனங்கள் தொடர்பான அபிப்பிராயங்களை மாற்றி நல்ல இளம் சமுதாயத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த முன்பள்ளி கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுவந்தது.
இதன் முதலாவது தொகுதி மாணவர்கள் வெளியேறிச்செல்லும் நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி வின் கமான்டர் ஜி.எஸ்.என்.பிரிய தர்சன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு தலைவில் நீலிகா அபயவிக்ரம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக இலங்கை விமானப்படையின் நலன்புரிக்கான பணிப்பாளர் எயார் வைஸ்மார்சல் எம்.எல்.கே.பெரேரா உட்பட விமானப்படை அதிகாரிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது நடைபெற்ற மூவினங்களின் கலாசார நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.