( லியோன் )
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி மாணவி மயூரி சண்முகலிங்கம் கிழக்கு மாகாண கடின பந்து கிரிக்கட் குழுவிற்கு தெரிவாகியுள்ளார்.
இவர் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான முரளி கிண்ண கிரிக்கட் சிற்றுப் போட்டியில் தனது திறமையை காட்டியுள்ளார்.
மேலும் பொது நலவாய நாடுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்கான குயின்ஸ் பெட்டன் ரிலே க்காக கிழக்கு மாகாணத்தில் சார்பில் கலந்து கொண்டு, மகாராணியால் அனுப்பப்பட்ட குறுல்கோல் தாங்கிச் சென்றார்.
இவர் பாடசாலை மட்ட விளையாட்டுப்போட்டிகளில் பல்வேறு தடவைகள் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




