கிழக்கு மாகாண அமைச்சுகள், திணைக்களங்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சுகள், திணைக்களங்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் 17 அணியினர் பங்குபற்றினர். கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் நா.மதிவண்ணன் தலமையில் இடம்பெற்ற இப்போட்டியில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன் கலந்து சிறப்பித்து இப்போட்டியினை அரம்பித்து வைத்தார்...

இதனைத்தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களத்தை கடும் போட்டியின் மத்தியில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வெற்றிபேற்று கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.








 (நன்றி ரிங்கோ நெற்)