பிரதிஅமைச்சர் ஹிஸ்புழ்ழாவின் நிதி ஒதுக்கீட்டில் கிராமிய அமைப்புக்களுக்கு பொருட்கள் வழங்கிவைப்பு

(ஜதி)

கௌரவபொருளாதார பிரதிஅமைச்சர் ஹிஸ்புழ்ழாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுதிட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் நகர் பிரதேச கிராம அமைப்புகளுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகர கேட்போர் கூடத்தில் இன்று(23.12.2013) பிரதேச செயலாளர் முஹமட்ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இதில் பொருளாதார பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலக கிராமிய அமைப்புகளுக்கு பொருட்கள் வழங்கிவைத்தார்.

அத்துடன் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தை அலங்கரிப்பதற்காக ரூபா 2 மில்லியன் நிதி உதவிசெய்வதாகவும் இதன்போது அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எச்.நௌபிக், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ், பொருளாதார பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாவின் இணைப்பாளர், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராமஅமைப்புகளின் தலைவர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.