(நாசர்)
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் சிலவற்றில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செங்கலடியில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் விற்பனை செய்யப்பட்ட எரிபொருளில் தண்ணீர் கலப்படம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் சுபைர் தனது வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும்போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

