“இன,மதபேதங்கள் மறந்து எல்லோர் மீதும் அன்பும் இரக்கமும் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் - முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்

“இன,மதபேதங்கள் மறந்து எல்லோர் மீதும் அன்பும் இரக்கமும் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன்”முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இயேசுநாதன் அவதரித்ததினமாக உலகெங்கும் பரந்து வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் இயேசுவால் போதிக்கப்பட்ட கருணை,அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களுடன் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ முயற்சிக்கவேண்டும்.

எமது நாட்டில் ,எமது பிரதேசத்தில் இல்லாத வளமில்லை என்னும் அளவிற்கு வளங்கள் பரந்துகிடக்கின்றன. ஆதனை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். அப்போதூன் வறுமை என்னும் கொடுமை அழிவடைந்துபோகும்.

அந்த நிலை ஏற்படுகின்றபோது அனைவருக்கும் வாழ்வில் நிலையான மகிழ்ச்சி ஏற்படும்.

எனவே இந்த இனியநன்னாளில் எமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளைகளைந்து ஒவ்வொருவரையும் தமது உறவினராக நினைத்துப் பார்க்கின்ற அளவிற்கு எமதுமனங்களில் எண்ணங்கள் வேரூன்றுகின்ற போதூன் தற்போது உருவாகியிருக்கும் சமாதானமான நிலைநிலைத்து அழியாத நிலையில் இருக்கும் என்றுகூறி, கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களில் இணைந்திருக்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைபெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.