உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் திறந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்

பாடசாலைக்கல்வியை பூர்த்திசெய்துள்ளவர்களின் தகைமையினை அதிகரித்து கேள்விக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பாடநெறிகள் தொடர்பில் அறிவூட்டும் வகையில் திறந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உயர் தொழில்நுட்ப கல்வி நிறு++வகத்திலும் இது தொடர்பான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் அதன் இணைப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உயர் தொழில்நுட்ப கல்வி தொடர்பிலான பதாகைகளும் வீதிகளில் கட்டப்பட்டதுடன் நகரின் முக்கிய பகுதிகளிலும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கருத்துதெரிவித்த ஆரையம்பதி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் ஜெயபாலன்,

உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் உள்ள பாடத்திட்டங்கள் அதன் தரங்கள் தொடர்பில் அதிகமானவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.அது தொடர்பில் பாடசாலை கல்வியை பூர்த்திசெய்தவர்களுக்கு போதியளவு விடயங்கள் தெரிவதில்லை.

இன்று உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் பல தொழில்வாய்ப்புகளுக்கு அதிக கேள்வி உள்ள பாடநெறிகள் பட்டப்படிப்புக்கு சமமாக கருப்படும் பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன.

பல்கலைக்கல்வியை மட்டுமே எமது சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நிலையை மாற்றி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் உள்ள பாடநெறிகளை அனைவரையும் தோற்றச்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.