(லியோன்)
மட்டக்களப்பு சகாயாபுரம் ,புதுமைபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு 22.12.2013 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி இன்னாசி ஜோசெப் அவர்களின் தலைமையில் சகாயாபுர சகாய அன்னை அரங்கில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வைத்திய அதிகாரி எஸ் .எஃப் ,அல்மேடா கலந்துகொண்டார்.
இவ் நிகழ்வானது மறை கல்வி ஆசிரியர்கள் மற்றும் மறை கல்வி மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது, இந் ஒளி விழா நிகழ்வு சிறப்பாக அமைய இம் மாணவர்களினது கலை நிகழ்வுகள் மிக சிறப்பாக அமைய பெற்றது ,
ஒளி விழா நிகழ்வில் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும், மற்றும் மறை மாவட்ட வினா விடை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ,மறை மாவட்ட மறைக்கல்வி பரீட்சையில் தரம் 02 தொடக்கம் தரம் 09 வரை மாணவர்களில் 90 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும், பதக்கங்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்,