மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடாத்திய மண்டலப் பெருவிழாவும், மணிகண்ட யாத்ரோதயம் மலர் வெளியீடும்


(துசி)

மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடாத்தும் மண்டலப் பெருவிழாவும், மணிகண்ட யாத்ரோதயம் மலர் வெளியீடும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.


மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சனிக்கிழமை காலை கணபதி ஹோமம் கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.ஜெகநாதசர்மா,  மற்றும் சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.சாம்பசிவம் சிவாச்சாரியார், கிரியாஜோதி சிவஸ்ரீ.எஸ்.உதயகுமார் குருக்கள்; ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கணபதி ஹோமம் இடம்பெற்றதும், கொழும்பு மற்றும் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட ஐயப்ப சுவாமிமார்களினால் பிரமாண்டமான முறையில் பஜனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் பூசைகள் யாவும் குருக்கள் மற்றும் குருசுவாமிமார்களினால் நிகழ்த்தப்பட்டது.

பூசையைத் தெடர்ந்து மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்; மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினால் முதன் முறையாகவும்“மணிகண்ட யாத்ரோதயம்” என்னும் பஜனை சிறப்பு மலர் வெளியீடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஐயப்ப சுவாமியின் பஜனை மலரானது இதுவே முதல் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஐயப்ப குருசுவாமிமார்கள்;, ஐயப்ப சுவாமிமார்கள், இந்து மதகுருமார்கள், ஆலயங்களின் தலைவர் மற்றும் செயலாளர், ஐயப்ப பக்த அடியார்கள் உட்பட ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூசைகள் மற்றும் மலர் வெளியீடு நிறைவுற்றதுடன் ஏற்பாட்டுக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.