மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனைப்பகுதியில் இந்திய வியாபாரி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சுற்றுலா வீசாவில் வந்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாகவே இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.