தேசிய மீலாத் போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கர் வித்தியாலய மாணவர் சாதனை

(நாஸர்)

தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட மீலாத் போட்டியின் ஆரம்ப பிரிவு போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கர் வித்தியாலய மாணவர் குழு முதலிடத்தினை தட்டிக்கொண்டுள்ளது.

ஏறாவூர் மாக்கான் மாக்கர் வித்தியாலய மாணவர்களினால் ஹஸீதா நிகழ்வு நடத்தப்பட்டே இந்த வெற்றிவாகை சூடப்பட்டுள்ளது.

முதலாமிடத்தைப்பெற்ற ஏறாவூர் - மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர் குழுவுடன் அதிபர் கே.காலிதீன்,பிரதி அதிபர் எம்.எல்.சபூர் பயிற்சி ஆசிரியர் ஏ.எல்.அன்சார் மற்றும் போட்டி பொறுப்பாசிரியர் எம்.எஸ்.நிஜாப் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.