மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் நள்ளிரவு ஆராதனை நடைபெற்றது.
இதன்போது பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திலும் நள்ளிரவு பூசைகள் சிறப்பாக நடைபெற்றன.
தாண்டவன்வெளி பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் இந்த பூசைகள் நடைபெற்றன.
இதன்போது ஜேசுபிறப்பை குறிக்கும் வகையில் பாலன் கொண்டுவரப்பட்டு பூசைகள் ஆரம்பமாகியதுடன் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்துடன் விசேட நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து பங்குத்தந்தையினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.