மெதடிஸ்த திருச்சபையின் கல்முனை சேகரம் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் ஒழுங்கு செய்திருந்த கிறிஸ்மஸ் கரோல் கீத இசை வழிபாடு நிகழ்வு இடம்பெற்றது.
நத்தார் இன்னிசை வழிபாட்டில் கிருஸ்தவ போதகர் அருட்திரு ஜோஸப் வில்லியம் ஜோகராஜா ஜெபத்தில் ஈடுபட்டதுடன் மாணவர்கள் பலர் கிறிஸ்மஸ் இசை வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
இதன் தொடராக பாடகர் குழு வீடு சந்திப்பு , நத்தார் திருவிருந்து வழிபாடு , வைத்தியசாலை சந்திப்பு , சுனாமி நினைவு ஆராதனை,சேகர ஐக்கிய உபவாசக் கூட்டம் , வழிப்பிரவு திருவிருந்து வழிபாடு , புதுவருட திருவிருந்து வழிபாடு , உடன்படிக்கை திருவிருந்து வழிபாடு என்பன தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.






