மட்டக்களப்பு ஆலயங்களில் திருவெம்பாவை தீர்த்த உற்சவம்

இந்துக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஒன்றான திருவெம்பாவையின் இறுதி உற்சவமான ஆருத்ரா தீர்த்த உற்சவம் இன்று சிறபாக நடைபெற்றது.

 ஆருத்ரா தீர்த்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.

மட்டக்களப்பின் நகர் பகுதிகளில் உள்ள மூன்று ஆலயங்களின் தீர்த்த உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மட்டக்களபு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்,கீரிமடு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயம்,கோட்டைமுனை மாரியம்மன் ஆலயம் என்பனவற்றின் தீர்த்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்திபெற்ற அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இந்த தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திர்த்தக்கேணியில் விசேட அபிசேகம் நடைபெற்று கும்பம் சொரிதல் நடைபெற்று தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதனைதொடர்ந்து ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருப்பொன்னுஞ்சல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் பெருமளவான அடியார்கள் கலந்தகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.