( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கண்டி திருத்துவக்கல்லூரி சாரணர் அமைப்பின் 100 வருட புர்த்தியினை முன்னிட்டு கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்காக வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிதி சேகரிக்கும் வகையில் சைக்கில் சவாரி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனைப் மாநகர சபைபை எல்லையை வந்தடைந்த இச் சாரணர் குழுவை சாய்ந்தமருது நகரில் வைத்து அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணர் ஆணையாளர் ஐ.எல்.ஏ. மஜீட் உட்பட சாரணர் பொறுப்பாசிரியர் எம்.ஏ.சலாம் உட்பட சாரண மாணவர்களும் வரவேற்று சாய்ந்தமருது கொம்டெக் கல்வி நிறுவகத்தில் பகற் போசணமும் வழங்கி கௌரவித்தனர்.
கல்லூரியின் சாரணர்ப் பொறுப்பாசிரியர் ரவீந்திர தம்பிட்ட தலைமையில் கடந்த 7 ஆம் திகதி கண்டியில் கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பித்த சாரணர் சைக்கிள் சவாரி கொழும்பு – புத்தளம் – மன்னார் – காங்கேசன்துறை – முல்லைத்தீவு – திருகோணமலை – மட்டக்களப்பு – கல்முனை – பொத்துவில் – ஹம்பாந்தோட்டை – காலி – கொழும்பு ஆகிய இடங்களினூடாக சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் சென்று கண்டியை அடையவுள்ளது.
12 நாட்கள் கொண்ட இச் சைக்கிள் சவாரியில் கண்டி திருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் 50 பேர் பங்கேற்கின்றனர்.



