பனிச்சங்கேணி அரசி வன்னிச்சி நாச்சியாரின் 450ஆவது ஆண்டு நினைவு, தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு - வாகரை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் கடந்த 450 வருடங்களுக்கு முன்னர் வாகரை பனிச்சங்கேணி பிரதேசத்தை ஆட்சி செய்து 1564ல் போர்த்துக்கீசரின் கீழ் ஆட்சியிழந்த தமிழரசி வன்னிநாச்சி அரசியின் 450ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தைப்பொங்கலன்று இடம் பெறவுள்ளது.
இவ் வரலாற்றுச்சிறப்பு மிக்க விழா எதிர்வரும் 2014ஆம்ஆண்டு தைப்பொங்கல் தினமான தை 15ஆம் திகதி இடம்பெற நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சிறப்பாக நடைபெறும் வகையில் புலம்பெயர் எமது உறவுகள் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு ,
வாகரை வாணன்,
ஆரணி அகம்,
நாவற்குடா, - கிழக்கு,
மட்டக்களப்பு