அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மட்டக்களப்புக்குள் வேலி அமைப்பதாக மாகாணசபை உறுப்பினரின் கவனத்துக்கு அப்பிரதேச மக்கள் கொண்டுவந்ததையடுத்து அப்பகுதிக்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் யானை வேலி அமைக்கும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தொடர்புகொண்டு இது தொடர்பில் கவனத்துக்கு கொண்டுசென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று(திங்கட்கிழமை)காலை பட்டிப்பளை பிரதேச செயலத்துக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களினால் வேலிகள் அமைக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு சென்றேன்.அங்கு அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த வன ஜீவராசி திணைக்களத்தினை சேர்ந்தவர்கள்,ஊர்காவல் படையினர்,இராணுவத்தினர் இணைந்து யானை வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய பகுதியை உள்ளடக்கியதாக இந்த வேலிகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
புட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 17ஆம் கட்டையில் இருந்து கச்சக்கொடிசுவாமிமலையில் உள்ள விகாரை வரையில் இந்த வேலிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்களி; ஒப்பங்கள் உள்ள சுமார் 800 ஏக்கர் காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்படுகின்றன.
ஊண்மையில் அம்பாறை மாவட்டத்துக்கான யானை வேலி அமைக்கப்படவேண்டுமானால் பதுளை சந்தியில் இருந்து மயானம் வரையான பகுதி மட்டுமே அம்பாறை மாவட்டத்துக்குரிய பகுதியாகவுள்ளது.ஆனால் அதனையும் தாண்டி எழுந்தமானமாக இந்த யாiனை வேலிகள் அமைக்கப்படுகின்றன.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.யானை வேலிகள் அமைப்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளை தங்கள் வசப்படுத்துவதற்கான சதி முயற்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.இந்த சதி முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டியபொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
தமிழர்களுக்குரிய ஒப்பக்காணிகளை அபகரித்து தங்களதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவருவது தொடர்பில் கடும் கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என்றார்.
