அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனைப்பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.12.2013)முற்பகல் வீட்டின் முன்னாலிருந்த தென்னை மரத்தின் தேங்காய் விழுந்ததில் 3 மாதக்குழந்தையொன்று பலியாகியுள்ளது.
காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் மரணமாகியுள்ளது. இக்குழந்தையின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
வீட்டு முற்றத்தில் பிள்ளையை தூக்கிக்கொண்டு இருக்கையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.