வணசிங்கவின் 25ஆவது ஆண்டு நினைவு தினத்தினை யொட்டி நடைபெறவுள்ள நினைவுப்பேருரை, நினைவு மலர் வெளியீடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் எதிரவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு பயினியர் வீதியிலுள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கிளையில் பிற்பகல் 3.30 மணிக்கு இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.
அமரர் டீ.எஸ்.கே.வணசிங்க மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் அதிபராக இருந்தவர். அத்துடன், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் துணைத்தலைவர், எனப் பல பதவிகளை வகித்தவர். இவரது நினைவுதினம் 2014ஆம் ஆண்டு மார்ச்மாதம் 31ஆம்திகதியாகும்.
இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பாதையில், அரசியலில் அகிம்சைவழியில் போராட்டங்களிலும், ஆரிசியராக தொழில்சங்கப் போராட்டங்களிலும், முன்னின்று செயற்பட்டு எண்பது, தொண்ணூறுகளில் போரினால் பாதிக்கப்பட்டோரின் குரலாகவும், ஒலித்து தமிழர் உரிமைப்போரில் தமக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.
இவரது நினைவு தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், நினைவுப் பேருரை, நினைவு மலர் வெளியிடுதல், அஞ்சலி நிகழ்வொன்றை நடத்துதல் போன்றன நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஏற்பாட்டாளரும் ஆசிரியருமான ஆ.கி.பிரான்சிஸ் தெரிவித்தார்.