மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் உட்பட பாடசாலை அதிபர்கள்,கல்வி பணிமனை அதிகாரிகள்,ஆசிரியர்கள், பெற்றோர்,மாணவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.