கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு கன்னங்குடா கண்ணகிவிநாயகர் ஆலயத்தின் பாற்குட பவனி

இந்துக்களின் சிறப்பு வாய்ந்த விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற கன்னங்குடா கண்ணகிவிநாயகர் ஆலயத்தின் மாபெரும் பாற்குட பவனி இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

பருத்திச்சேனையில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து பெருமளவான அடியார்கள் பால்குடம் ஏந்தியவாறு நீண்டதூரம் ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு அடியார்கள் கொண்டுவரப்பட்ட பால் குடங்கள் விநாயகப்பெருமானுக்கு அபிN~கம் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கௌரியம்மனுக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டதுடன் அடியார்களுக்கான தெற்பை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து கௌரி விரத பூசைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.இந்த பூசைகளில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.