கிழக்கு மாகாண கலை இலக்கிய பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தின் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் யூ.டபிள்யு.வெளிக்கள தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண பேரவை செயலளார் கே.கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 2013ஆம் ஆண்டு சிறந்த தமிழ் நூல்களுக்கான விருது, கலைஞர்களுக்கான வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டதுடன் விழாவையொட்டிய மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்த விழாவில் கலை கலாசார நடனங்கள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நடைபெற்றது.