தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிக்கு பாராட்டு விழாவும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவும் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டைக்கல்வி அதிகாரி ம.டேவிட் அவர்களும் சிறப்பு அதிதிகளாக லயன் கழகத்தைச் சேர்ந்த திருமதி கலா மகேந்திரராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டி.சாந்திகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பொதுநலவாய மாநாட்டை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற கல்லூரி மாணவி செல்வி நிலக்சலா சந்திரகுமார் என்பவர் கௌரவிக்கப்பட்டதுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
அத்துடன் இம்மாத இறுதியில் தமது சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள கோட்டக்கல்வி அதிகாரி டேவிட் அவர்கள் கௌரவிக்கப்பட்டு வாழ்த்துமடலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
