புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் நிதியொதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.
;
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுமார் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபா செலவில் இந்த போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் சித்திபெற்ற மாணவி தனுர்ஜாவின் கல்வி நடவடிக்கைக்காக தனது சொந்த நிதியில் ஒரு தொகையை வழங்கிவைத்தார்.

பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் தேவை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடு;க்கப்பட்டபோதிலும் அவை பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் மாகாணசபை உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் உடனடியாக இந்த இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.