நாவற்குடாவில் மாபெரும் டெங்கு பரிசோதனை நடவடிக்கை

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் நேற்று(16.11.2013)வீடு வீடான டெங்கு பரிசோதனை நடவடிக்கை நடைபெற்றது.
காத்தான்குடி பொலிசார், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு சுகாதார அலுவலகம், விஸேட அதிரடிப்படையினர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற் கொண்டனர்.

இதன் போது நாவற்குடா பிரதேசத்திலுள்ள வீடுவீடாக சென்ற பொலிசார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், விஸேட அதிரடிப்படையினர் வீட்டின் சூழல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் என்பவற்றை பரிசோதித்ததுடன் டெங்கு தொடர்பான அறிவூட்டலையும் செய்தனர். வீடுகளில் காணப்பட்ட திண்மக்கழிவுகளையும் அகற்றினர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்;.நந்தகுமார், பொதுச்சுகாதார பரிசோதகர்கர்களான எஸ்.செனவிரட்ன, ஆர்.தேவேநேசன், கே.ராஜேந்திரா உட்பட விஸேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர். இந்த வேலைத்தில் சிரமதானமும் செய்யப்பட்டது.