(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை கிழக்கு மாகாணத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், தனியார் மீன்பிடி நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹீ தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள சீனன்குடா மீன்பிடி .நிலையத்திற்கு (16.11.2013) கிழக்கு மாகாண விவசாய கால்நடை .அபிவிருத்தி, மீன்பிடி,கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், தனியார் மீன்பிடி நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹீ ஆகியோர் சென்று அந்த மீன்பிடி .நிலையத்தை பார்வையிட்டனர்.
இதன் போது அங்கு கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது அதன் போதே சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், தனியார் மீன்பிடி நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹீ மேற் கண்டவாறு கூறினார்.
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் அழைப்பின் பேரில் சென்ற இவர்கள் அங்குள்ள மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். இதன் போது தொடர்ந்து கருத்த தெரிவித்த சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், தனியார் மீன்பிடி நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹீ புதிய தொழில்நுட்ப வசதிகளையும், மீன்பிடி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களையும் குறிப்பாக சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சஊதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமுள்ள வர்த்தக உறவினை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றமுடியும் எனவும் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மீனவர்களின் வறுமை நிலையினை குறைக்க முடியும் என தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி மற்றும் ,அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர், உட்பட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை .அபிவிருத்தி, மீன்பிடி,கைத்தொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.