பேத்தாழை பொது நூலகத்தில் வாசிப்பு மாத இறுதி நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் முகமாக பேத்தாழை பொது நூலகத்தினதும் ஆலோசனைக்குழுவினதும் ஏற்பாட்டில் பேத்தாழை பொது நூலகத்தில் கோறளைப்பற்றுக் கோட்டமட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் விழாவும்,தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் வைபவமும் நேற்று வெள்ளிக்கிழமை
குகநேசன் கலாசார மண்டபத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஜனாப். எஸ்.எம். சிஹாப்தீன் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்குமாகாணசபை உறுப்பினரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,கௌரவ அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.எம்.சார்ள்ஸ் உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளர் ஆ.உதயகுமார் ,கிழக்குப் பல்கலைக்கழகம் பதிவாளர் மகேசன், கல்குடா கல்வி வலயம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.