ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்ப்பற்று – 1 கல்விக் கோட்டப் பாடசாலையான ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியால அதிபர் ச.ஜெயராஜா தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்ப மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் அவர்களும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். சத்தியநாதன், கௌரவ அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம். மற்றும்  மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்ப உதவிக்கல்விப் பணிப்பாளர் எம். சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் 2012/2013 வருடங்களில் சாதனை படைத்த மாணவர்கள் பரிசில்கள் சான்றிதழ்கள் வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.