பகவான் ஸ்ரீசத்தியசாயிபாபாவின் ‘அவதார அறிவிப்பு’ தினத்தினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள்

பகவான் ஸ்ரீசத்தியசாயிபாபாவின் ‘அவதார அறிவிப்பு’ தினத்தினை முன்னிட்டு இலங்கை பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையங்களின் கிழக்கு பிராந்திய இணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேச மக்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை மற்றும் ஊத்துச்சேனை,செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரடியன்குளம் ஆகிய பிரதேச மக்களுக்கே இந்த உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மற்றம் அம்பாறை மாவட்டங்களில் உள்ள சாயி சேவா நிலையங்கள் மற்றும் மண்டலிகளின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.