கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் சுமுகமான நிலைமை

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில்  மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் சுமுகமான நிலைமை ஏற்பட்டு பாடசாலை நடைபெறுகிறது.
மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்ட போதிலும் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடாத்தினர்.

இன்று காலையில் பாடசாலைக்கு கல்முனை கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப்பணிப்பாளர்  பி.எம்.எம்..பதுர்த்தின் வருகை தந்து பாடசாலை நிலைமைகளை கண்காணித்தார்.

கடந்த மூன்று நாட்களாக  பாடசாலையில் பிரச்சினைகள்    நீடிப்பதை அறிந்து இது தொடர்பாக ஆராயும்பொருட்டு கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது -  மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாஸல்களின் தலைவர்கள், நிர்வாகத்தினர் நேற்று பாடசாலைக்கு வருகைதந்தனர்.

அவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மேற்கொண்டு தாங்களும் இப்பிரச்சினைகள் தொடர்பா உரியவர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்ததுடன் பாடசாலையை வருகின்ற மாணவா்களை வைத்து பாடங்களை நாடத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதே வேளையில் பாடசாலையினால் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு மகஜர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.