இதன் இறுதி தினம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் இன்று காப்பு அணியும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு நிகழ்வுகள் வெகுவிமர்சையாக இடம்பெற்றன.
இதனையொட்டி இன்று காலை அம்பாளுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் கௌரியம்பாளுக்கு அபிஸேக ஆராதனைகளும் இடம்பெற்றன.
இந்த உற்சவத்தின் சிறப்பம்சமாக ஆலை மர நிழலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்துக்கும் விசேட அபிஸேகங்களும் பூசைகளும் இடம்பெற்றன.
இந்த ஆலயத்தில் கௌரி விரதத்தின் விசேட அம்சமாக எந்த ஆலயத்திலும் இடம்பெறாத ஜோதி தரிசனம் செய்யப்படுகின்றமை மிகவும் முக்கியத்துவமாகும்.
ஆலயத்தின் உற்சவ காலகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ உதயன் குருக்கள் மற்றும் ஆலயத்தின் நித்தியகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ரூபன் குருக்கள் ஆகியோரால் விரத தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
கௌரி விரதத்தின் இறுதிநாளில் சிவனும் உமையம்மனும் இரண்டற கலந்து அர்த்தனாதீஸ்வரராக காட்சியளிக்கும் செயற்பாடு இங்கு நினைவூட்டப்படுகின்றமை எந்த ஆலயத்திலும் இடம்பெறாத சிறப்பாகும்.
அதுமட்டுமன்றி 21 தினங்களும் விரதமிருக்கும் அடியார்கள் தாங்கள் வணங்கும் கும்பங்களுக்கு தங்களது கைகளாலேயே பூசைகள் செய்துவணங்குவதும் சிறப்பம்சமாகும்.