(பிரதீஸ்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் செட்டிபாளையத்தில் 3ம் திகதி காலை 6.20 மணியளவில் ,டம்பெற்ற வீதி விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ்வண்டியும் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்வண்டியும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இரண்டு வௌ;வேறு வீடுகளுக்குள் புகுந்தமையால் சேதம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த ஒரு வீடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஐனா) சகோதரர் உடையது. களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.