மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தப்பரிசோதனைக்குச் செல்லும் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் தாக்கியமை கண்டனத்துக்குரியதாகும் என மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ் ,
சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அரச திணைக்களங்களில் கடமையாற்றும் பெண் உத்தியேகத்தர்கள் சிலர் மருத்துவ அறிக்கைக்கான இரத்தப்பரிசோதனையை மேற்கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த பரிசோதனைக்கான நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகப் பெண் பரிசோதனைக்காகச் சென்ற பெண் உத்தியோகத்தர்களை கடுமையான வார்த்தைகளாலும், தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்துள்ளார்.
இதனால் வீடு திரும்பிய குறித்த உத்தியோகத்தர்கள் என்னிடம் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலை அதிகாரி பெண்ணாக இருந்த போதும் இவ்வாறு பெண் உத்தியோகத்தர்களைத் திட்டியமையானது கண்டிக்கப்படுவதோடு, இது குறித்த உத்தியோகத்தருக்கு அவருடைய உத்தியோகத்திற்கு நல்லதல்ல.
இவ்வாறான பெண் உத்தியோகத்தர்களே பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கரணமாக அமைகின்றனர். எனவே இந்த விடயம் குறித்து என்னுடைய கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் வைத்தியசாலை நிர்வாகத்திலும் இதுதொடர்பில் குறித்த உத்தியோகத்தர்கள் முறையிட்டுள்ளதாக அறிகின்றேன்.எனவே நிர்வாகம் இது தொடர்பில் பூரண விசாரண நடத்தவேண்டும்.

