மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டப் பாடசாலையான ஐயன்கேணிதமிழ் வித்தியாலயத்தில் போசாக்கு விழிப்பூட்டல் நிகழ்வும் செயற்பாடும் செங்கலடி சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலத்தின் அனுசரணையுடன் வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் வழிநாடாத்தலின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பாடசாலைமாணவர்கள் அனைவருக்கும் சரியான அளவு மற்றும் சேர்வைகளுடன் தயாரிக்கப்பட்ட இலைக்கஞ்சிவழங்கப்பட்டு நிறையுணவின் அவசியமும் தயாரிக்கும் முறைபற்றியும் வைத்திய அதிகாரிஅவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் நிறையுணவின் அவசியத்தை ஐயன்கேணி கிராம மக்களுக்கு உணர்த்த வித்தியாலய அதிபர் எஸ்.ஜெயராஜாவின் வழிகாட்டலில் மாணவர்கள் பதாகைகளுடன் பேரணியாகச் சென்றுவிழிப்பூட்டினர்.
இப் போசாக்கு மாதநிகழ்வில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வி.விஜயகுமார் மற்றும் தாதிய சகோதரிகள் மேற்பார்வை குடும்ப நல உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதாரபரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோர்; கலந்து சிறப்பித்தனர்.