சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப்பரிவில் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றும் சி.திலீப் குமார் என்பவரின் சமுர்த்தி முகாமையாளர் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தாபனக்கோவை விதிகளுக்கு அமைவாக இவரின் சமுர்த்தி முகாமையாளர் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சமுர்த்தி முகாமையாளருமான மேற்படி சி.திலீப் குமார் என்பவர் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை (28.10.2013)காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மூன்று சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என மேற்படி மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சமுர்த்தி முகாமையாளருமான இவர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டு;ள்ளது.
இதன் அடிப்படையில் மேற்படி நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(29.10.2013) ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது இவரை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க பதில் நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இவர் விளக்கமறியலில் வைக்க்பபட்டுள்ளார்.
பட்டதாரி பயிலுனர்களுக்காக அண்மையில் வழங்கப்பட்ட சமுர்த்தி முகாமையாளர் நியமனத்தின் மூலம் இவர் செயங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டு அங்கு கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.