முரண்பாடுகளை தோற்றுவிக்கும் காணிகளை சுவீகரியுங்கள் -இணையத்தில் தீர்மானம்

எல்லைக்கிராமங்களில் பயன்படுத்தப்படாமலிருந்து தற்போது முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காணிகளை ஜனாதிபதி சுவீகரித்து எவரும் செல்லமுடியாத உட்புக முடியாத வலயமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என இணயத்தின் மாதாந்த ஒன்றுகூடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பகல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஸ்தா சொலிடாரிட்டி அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வ.கமலதாஸ் தலைமையில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் மாதாந்த ஒன்றுகூடலில்,

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைகள் குறித்துக்கலந்துரையாடப்பட்டபோது, ஜனாதிபதி கையகப்படுத்த வேண்டும். அத்துடன் அவ்வாறானவர்களுக்கு மாற்றுக்காணிகளையோ, நிவாரணங்களையோ வழங்கவேண்டும். இப்பிரச்சினையில் சட்டத்தினை நாடுவதை விடவும் இனமுறுகல் ஏற்படாவண்ணம் இவ்வாறான வழிகளைக் கையாள்வதுசிறப்பாக இருக்கும்எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இன்றைய ஒன்று கூடலில், சிவில் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றுமு; சட்ட விதிமுறைகள் தமிழ் மொழியில் இல்லை. அதனால் இவை பற்றி தமிழ் மக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் செய்யப்படவேண்டும்.

பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைத் தமிழில் மேற்கொள்ள வேண்டும். சிறிய விடங்களுக்கெல்லாம்  மக்களைச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிடுத்து நல்லிணக்கமான முறையில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள் காணப்படவேண்டும். இதற்காக பிரஜைகள் குழுக்களை அமைத்து பிரதேச, மாவட்ட ரீதியாக உடனுக்குடன் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். இதற்காக இயங்காதிருக்கும் பிரஜைகள் குழுக்களை ஸ்தாபத்து இணையம் செயற்படுத்த வேண்டும்.

டிசம்பரில் சூறாவளியின் தாக்கம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதனால் அதற்காக முன்னேற்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.  என்றும் ஸ்பியர் எனப்படும் மனிதநேய சாசனமும் மனிதநேய சாசனமும் மனித நேய மறுசீரமைப்பின் அடிப்படைத் தரங்களும் பின்பற்றப்படவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரம், கொமன்வெல்த் மாநாட்டுப் பிரிநிதிகளை இணையம் ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு ஆராயப்பட்டு, மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் கொமன்வெல்த் பிரதிநிதிகளை இணையம் சந்திக்க வேண்டும். எனவும், மட்டக்களப்பு சிவில் சமூகம் என்ற பெயரில் ஒருசில நபர்களின் குழு ஒன்று மாவட்டத்திற்காகச் செயற்படமுடியாது. அந்த வகையில் மட்டக்களப்பின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்வகையில் இருக்கும் இணையம் கொமன் வெல்த் பிரதிதிநகளைச் சந்திக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு தியாவட்டவான் பிரNதுசத்தில் பாடசாலை மைதானத்திற்கு உரிமை கொண்டாடிய பௌத்த மதகுரு நல்லிணக்கமான முறையில் மாணவர்களுக்கு விட்டுக் கொடுத்தமையும், அதனைக் கௌரவித்து இஸ்லாமியத் தலைவர்கள் முச்சக்கர வண்டியொன்றை வழங்கிக் கண்ணியப்படுத்தியமையும் ஒரு முன்மாதிரியான நல்லிணக்கச் செயற்பாடாக இணையம் பாராட்டியது.

விசேடமாக வடமாகாண சபையின் சபாநாயகராக யாழ்ப்பாண இணையத்தின் தலைவராக இருந்த சி.வீ.கே.சிவஞானம் தெரிவு செய்யப்பட்டமையை ஒரு கௌரவமாகக் கருதி மட்டக்களப்பு இணையத்தின் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்தினையும் அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.