மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி –லண்டன் பாடசாலையும் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் சர்வதேச தரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இந்த மெய்வல்லுனர் போட்டி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

கல்வி திணைக்களமும் பிரித்தானிய - இலங்கை நட்புறவுச்சங்கமான ஓசியன் ஸ்டார் அமைப்பும் இணைந்து இந்த போட்யை நடத்தியது.

புளியடிமுனை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் லவகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் பிரித்தானிய - இலங்கை நட்புறவுச்சங்கமான ஓசியன் ஸ்டார் அமைப்பின் ஸ்தாபகர் டிலான சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த ஆரம்ப பிரிவு மெய்வல்லுனர் போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட எட்டு பாடசாலைகள் கலந்துகொண்டதுடன் பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆரம்ப பிரிவு பாடசாலையான கல்பார்க் பாடசாலையில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த போட்டியில் பங்குபற்றினர்.

இந்த சுற்றுப்போட்டியில் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலாம் இடத்தினையும் தன்னாமுனை புனித வளானர் பாடசாலை இரண்டாம் இடத்தினையும் பிரித்தானியாவின் கல்பார்க் பாடசாலை மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றிக்கேடயங்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.