முதல்முறையாக இயந்திர விதையிடு கருவி மூலம் வரிசையில் நெல் விதைப்பு அறிவூட்டும் நிகழ்வு

(மண்டூர்-தவக்குமார் )  

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக விவசாயிகளின் நன்மைகருதியும் களைகளைக்கட்டுப்படுத்தும் நோக்கிலும் சிறந்த விளைச்சலை பெறும் நோக்கிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிசையில் நெல்விதைக்கும் இயந்திர விதையிடு கருவியினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று மண்டூர் பிரதேசத்தில் உள்ள முன்னோடி விவசாயியான வன்னமணி என்பவரின் நெற்காணியில் மண்டூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் கருணாகரன் தலைமையில்  தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வானது இன்று பி.ப.10.00 மணியளவில் மங்கள விளக்கேற்றப்பட்டுஓய்வு பெற்ற விவசாயப்போதனாசிரியர் பொ.பரமானந்தராசா மற்றும் பெரும்பாக உத்தியோகத்தர் செல்வி.சு.ஜெயராணி ஆகியோர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இன் நிகழ்விற்கு உதவி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் சி.பரமேஸ்வரன் மற்றும் விசாயப் போதனாசிரியர்கள் விவசாயிகள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் ஆகியோர்கள் சமூகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இயந்திரத்தின் மூலம் எப்படி நெல்லை விதைப்பு செய்வது பற்றி அனைவருக்கும் நெல் பாடவிதான உத்தியோகத்தர் சல்மான் அவர்கள் விளக்கமளித்தார் இறுதியாக அனைவரும் பார்த்திருக்கும் வகையில் சிறந்த முறையில் நெற்காணியில் இயந்திர விதையிடு  கருவி மூலம் வரிசையில் நெல் விதைக்கப்பட்டது. இந்த விதைப்பு மூலம் அதிகமான லாபத்தினை விவசாயிகள் பெறலாம் விவசாய போதனாசிரியர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.