விபத்தில் முச்சக்கர வண்டி சேதம்

(எம்.எஸ்.நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை (2.10.2013)பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் முச் சக்கர வண்டி யொன்று பலத்த சேதத்துக்குள்ளானது.

மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச் சக்கர வண்டி மின்சார கம்பத்துடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம்; பெற்றுள்ளது.

முச் சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதுண்டு அருகிலிருந்து கடை ஒன்றுக்குள் புகுந்ததால் கடைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டது. ஏறாலு+சை; சேர்ந்த ஒருவரே இம் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.