கடல் அலையின் தாலாட்டில் நீண்டகாலமாக அடியார்களுக்கு சகல வினைகளையும் தீர்த்துவருவதன் காரணமாக இப்பிரதேசத்தில் இந்த ஆலயம் பிரசித்திபெற்று விளங்குகின்றது.
இன்று பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
விசேட பூசைகள் இடம்பெற்று அம்பாளின் சடங்கு பொருட்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பத்ததி வழிபாட்டு முறைகளைக்கொண்டு தமிழர்களின் பண்பாடுகளைக்கொண்டதாக இந்த ஆலயத்தின் உற்சவம் இடம்பெற்றுவருகின்றது.
ஆலயத்தில் கதவு திறத்தல் சடங்குக்கான விசேட மடைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து இலட்சுமி தேவியை நினைத்து மேற்கொள்ளப்பட்ட பூசையினை தொடர்ந்து திரு விளக்கு ஆலயத்தினை சூழ பக்தி பூர்வாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விசேட பூசைகள் செய்யப்பட்டு வருடாந்த சக்தி விழாவுக்கான திருக்கதவு திறக்கப்பட்டது.
;
ஏழு தினங்கள் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.