அரங்க ஆய்வு கூடத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பேராசிரியர் மௌனகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் நாடு காமராஜர் பல்கலைகழகத்தினை சேர்ந்த பேராசிரியர் ந.முத்துமோகன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பிரேம்குமாரினால் பேராசிரியர் சிவத்தம்பியின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து பேராசிரியர் சிவத்தம்பி மற்றும் தமிழின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் சிறப்பு உரைகள் இடம்பெற்றன.