இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று ஒரு யுக சாதனைபடைத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
அத்துடன் பல்வேறு அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி தமது உள்ளக்கிடங்கைகளை வெளிப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிசாதனைக்கு வழிகோளிய வாக்காளர் பெருமக்களுக்கு நன்றிகள் கோடி.
இந்த தேர்தல் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் முற்றுமுழுதான மறுவடிவமாகவே பார்க்கப்பட்டது.இந்த தேர்தல் வெற்றிமூலம் அது நீரூபனமாகியுள்ளது.இன்று எமது போராட்டம் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரம் ரீதியாகவும் உச்சநிலையை எட்டியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் தனி இனம் அவர்கள் அவர்களை ஆளும் தகுதியுடையவர்கள் என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. ஒரே இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் தாங்களை தாங்களே ஆளும் வகையில் தீர்வுத்திட்டம் ஒன்றினை வழங்கவேண்டிய தார்மீக பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.அதனைப்பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேசத்திடம் உள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் தமது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.அந்த மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்பட முன்வரவேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு,தமிழர்களின் சுயாட்சி என்பன தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவான கருத்தினை இன்று வழங்கியுள்ளனர்.
வடக்கில் ஓட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்ததன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மாபெரும்; வெற்றி இலக்கினை அடையமுடிந்தது.ஒவ்வொருவரும் தமது வாக்குப்பலத்தினை வெளிப்படுத்தும்போதே அது மாபெரும் சக்தியாக வெளிப்படும் என்பது வட மாகாணசபை தேர்தல் மூலம் வெளிப்பட்டுகின்றது.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமது வாக்குப்பலத்தினை நிரூபித்திருந்தால் கிழக்கு மாகாணசபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கும்.ஆனால் வாக்களிக்க அதிகளவான தமிழ் மக்கள் செல்லாததன் காரணமாகவே நாங்கள் எமது இலக்கினை இழந்தோம்.
எதிர்வரும் காலங்களில் வரும் தேர்தல்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தினை முழுமையாக பயன்படுத்தும்போதே அது நமக்கு மிகுந்த பயனைத்தரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.