மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நீக்கும் வகையில் ரொட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இரத்ததான முகாம் நடத்தப்பட்டுவருகின்றது.
இதன் கீழ் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று அண்மையில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ரொட்டறிக்கழகத்தின் தலைவர் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப வைத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் ரொட்டறிக்கழகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரத்ததானமுகாமில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.