கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் இது தற்காலிக இடமாற்றமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தற்போது கிழக்கு மாகாண பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பூஜித ஜயசுந்தர கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பொலிஸாரை முழங்காலிடச் செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.