கல்லடியில் கத்திக்குத்துக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் சடலம் மீட்பு

மட்டக்களப்பு,கல்லடிப்பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்லடி,வேளாங்கன்னி ஆலய வீதியில் உள்ள பாழடைந்த வளவில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் கந்தமூர்த்தி புவனேந்திரன்(30வயது)என்ற ஒரு பிள்ளையின் தந்தையினுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.