அரசியலுக்கு அப்பால் நாங்கள் எமது கல்வித்துறையினை மேம்படுத்தக்கூடிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமெனவும் அவர் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட விளாவட்டவான் பொது நூலகத்துக்கு மாகாணசபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட 50ஆயிரம் ரூபா நிதியின் கீழ் நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதனை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வவுணதீவு பிரதேசம் கடந்த காலத்தில் பல்வேறு அழிவுகளைக்கொண்ட பிரதேசம்.நாங்கள் அனைத்தையும் இழந்து இன்று எதுவும் அற்றவர்களாக உள்ளோம்.நாங்கள் எங்களை நாங்களே ஆளவேண்டுமாகவிருந்தால் எமது கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாகும்.
நூங்கள் கல்வியை பலப்படுத்தவேண்டும்.அந்த கல்வியை பலப்படுத்துவதன் மூலமே நாங்கள் எமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்தமுடியும்.இன்று சர்வதேச ரீதியில் ஏற்பட்டும் தமிழ் மக்களுக்கு சார்பான நிலை நாளை எமக்கு இறுதி தீர்வை பெற்றுதரக்கூடிய வாய்ப்பினை வழங்கலாம்.
அந்தவேளையில் எங்கள் சமூகம் ஒரு சிறந்த கல்வி கட்டமைப்பினை கொண்டிருக்கும்போதே நாங்கள் சிறந்த பலனைப்பெற்றுக்கொள்ளமுடியும்.
இன்று எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன,எமது சொத்துகள் பறிக்கப்படுகின்றன.எமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன.ஆனால் எம்மிடம் இருந்து பறிக்கமுடியாத ஒன்று இந்த கல்வி மட்டுமே நாங்கள் அவற்றினை இறுகப்பற்றிக்கொள்ளவேண்டும்.அதற்கு தேவையான முடிந்தளவு உதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும்.
இன்று எமது எல்லைப்பகுதிகள் பறிபோயிக்கொண்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வீதாசாரமும் குறைந்துகொண்டுசெல்கின்றது.இவற்றுக்கு காரணம் எமது பின்தங்கிய பிரதேச மக்களின் கல்வி அறிவின் வீழ்ச்சியே காரணமாகவுள்ளது.
நாங்கள் அவற்றினை மீள கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால் எமது சமூதாயத்தின் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமே மேற்கொள்ளமுடியும்.இதற்கு அனைவரும் அரசியல்வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளது.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
